அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
வம்சி இயக்கத்தில் ரவி தேஜா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ' டைகர் நாகேஸ்வரா ராவ்'. நுபூர் சனோன், காயத்ரி பரத்வாஜ், ரேணு தேசாய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை அபிஷேக் அகர்வால் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
உண்மை சம்பவத்தை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படம் ரவி தேஜா நடிப்பில் உருவாகும் முதல் பான் இந்திய படமாகும். தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. ஏற்கனவே இந்த படம் வருகின்ற அக்டோபர் 20ம் தேதி அன்று வெளியாகும் என அறிவித்த நிலையில் இந்த படம் தள்ளி போவதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இந்த நிலையில் நேற்று படக்குழுவினர்கள் இது குறித்து தெரிவித்துள்ளனர். அதன்படி, " எந்த வித அடிப்படை காரணங்கள் இல்லாமல் சிலர் ' டைகர் நாகேஸ்வரா ராவ்' படம் தள்ளி போவதாக வதந்திகளை பரப்பி வருகின்றனர். ஏனெனில், எங்கள் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது . அதனால் திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் எங்கள் படத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது" என தெரிவித்துள்ளனர். மேலும், ரிலீஸ் தேதியில் எந்த மாற்றமும் இல்லை வருகின்ற அக்டோபர் 20ம் தேதி அன்று வெளியாகும் என உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதற்கு ஒரு நாளுக்கு முன்பு தான் விஜய் நடிக்கும் லியோ, பாலகிருஷ்ணாவின் பகவந்த் கேசரி படங்கள் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.