திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |

இசையமைப்பாளர் இளையராஜா இந்திய சினிமாவில் இதுவரை 1000 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இன்றைய தலைமுறையினருக்கும் அவர் இசையமைத்த பாடல்கள் பல நேரத்தில் தாலாட்டாக அமைந்துள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாக உள்ளதாகவும், இதனை இளையராஜா தயாரிக்கின்றார் என அறிவித்தனர். ஆனால், அதன் பிறகு எந்த செய்தியும் இது குறித்து வெளியாகவில்லை.
இந்த நிலையில் பிரபல பாலிவுட் இயக்குனர் பால்கி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இது குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, "இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை நான் படமாக எடுப்பது என் கனவு. ஒரு வேளை நான் இயக்கினால் அதில் தனுஷை தான் இளையராஜாவாக வைத்து இயக்குவேன். தனுஷிடம் இளையராஜாவின் முக சாயல் உள்ளது. இந்த படத்தை நான் எடுத்தால் அதுதான் தனுஷூக்கு கொடுக்கும் மிகப்பெரிய பரிசு என கூற விரும்புகிறேன். ஏனெனில், தனுஷூம் என்னை மாதிரி இளையராஜாவின் தீவிர ரசிகர் என்று தெரிவித்தார்".
பால்கியின் இந்த பேட்டி இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது .




