எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
டிவி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் கவின். 'நட்புன்னா என்னன்னு தெரியுமா' படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். அந்தப் படம் தோல்வியடைந்தாலும் அடுத்து ஓடிடியில் வெளியான 'லிப்ட்' படம் அவருக்கு வரவேற்பைப் பெற்றுத் தந்தது. இந்த வருடம் வெளிவந்த 'டாடா' படம் தியேட்டர்களில் வெளியாகி வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.
தற்போது இரண்டு படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் கவினுக்கு அடுத்த மாதம் ஆகஸ்ட் 20ம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சினிமாவில் கதாநாயகனாக நடித்து ஒரு வெற்றியைக் கொடுத்த பின்னரே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற முடிவில் இருந்தாராம். தற்போது அவரது வீட்டில் பார்க்கும் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
2019ல் நடைபெற்ற 'பிக் பாஸ் சீசன் 3' நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அதில் மற்றுமொரு போட்டியாளராகக் கலந்து கொண்ட இலங்கைத் தமிழ்ப் பெண்ணான லாஸ்லியாவைக் காதலிப்பதாக பரபரப்பு எழுந்தது. இருவருடைய காதல் விவகாரம் நிகழ்ச்சியில் சில சண்டைகளையும் ஏற்படுத்தியது. ஆனால், வெளியில் வந்த பின் இருவரும் காதலிக்கவில்லை, பிரிந்துவிட்டனர் என்று தகவல் வெளியானது. லாஸ்லியாவும் சினிமாவில் கதாநாயகியாக நடிக்கத் துவங்கினார்.
மணப்பெண் யார், திருமண தேதி, இடம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கவின் தரப்பிலிருந்து விரைவில் வெளியாகலாம் என்கிறார்கள்.