பிளாஷ்பேக்: 'முக்தா' சீனிவாசன் என்ற முத்தான இயக்குநரைத் தந்த “முதலாளி” | ஹீரோயின் ஆனார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா | சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம் | 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் | கணவர் சித்ரவதை செய்வதாக பாலிவுட் நடிகை வழக்கு | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை | தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா | கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் |

சின்னத்திரை பிரபலமான அனிதா சம்பத், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனமாடி கலக்கினார். தற்போது திரைப்படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் அவர், மாடலிங்கும் செய்து வருகிறார். அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அனிதா சம்பத், தனது 18 வருட சென்ட்டிமெண்ட் குறித்த பதிவை வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் முக்கியமான தருணங்களில் ஒன்று பூப்படைவது. அவ்வாறு அனிதா சம்பத் பூப்படைந்த போது சடங்கு நிகழ்ச்சிக்காக எடுக்கப்பட்ட புடவையை அனிதா பத்திரமாக பாதுகாத்து வருகிறார். தற்போது அந்த புடவையை கட்டி போஸ் கொடுத்துள்ள அனிதா, சடங்கு நிகழ்ச்சியின் போது சிறுவயதாக அதே புடவையுடன் எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டு, 'என்னுடைய முதல் மற்றும் ஸ்பெஷலான புடவை' என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.