ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

திரைப்படங்கள், குறும்படங்களில் சிறிய ரோல்களில் நடித்தாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் திறமை கொண்டவர் நடிகை கேப்ரில்லா செல்லஸ். தற்போது சின்னத்திரையில் சுந்தரி என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து பல கோடி தமிழ் ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்துவிட்டார். சாதிக்கத் துடிக்கும் பலருக்கும் நம்பிக்கை நட்சத்திரமாக மாறியிருக்கிறார்.
இந்நிலையில், தான் படித்த பள்ளிக்கே சிறப்பு விருந்தினராக சென்று கெத்து காட்டியுள்ள கேப்ரில்லா செல்லஸ் அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில், 'எல்லோரும் பார்த்து ஏங்குற பருவம் பள்ளிக்கூட பருவம் தான். எல்லோரும் சொன்னாங்க நீங்க எல்லோரும் பயங்கராமான பட்டாம்பூச்சி என்று. ஆனால், நீங்க எதிர்காலத்தில் கழுகு மாதிரி இருக்கணும். பயங்கரமான உயரத்தில் பறக்கணும்' என அங்கிருந்த மாணவர்களுக்கு அட்வைஸ் செய்துள்ளார்.




