ஜெயம் ரவியை வைத்து இரண்டு இரண்டாம் பாக படங்களை இயக்கும் மோகன் ராஜா | படைப்பாளிகளை அவமதிக்கும் செயல் : ஞானவேல் ராஜாவிற்கு பாரதிராஜா கண்டனம் | ஹிந்தி படத்தை இயக்கும் அஜய் ஞானமுத்து | சொந்த வீடு கனவை நனவாக்கிய சரண்யா | கன்னடத்தில் ஹீரோயினாக வரவேற்பு பெற்ற தமிழ் சீரியல் நடிகை | கார்த்தியுடன் நடிக்கும் சீரியல் நடிகை | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் மகேஷ் பாபு? | கங்குவா படத்தில் ராணா? | தெலுங்கைத் தொடர்ந்து தமிழில் ரீ ரிலீஸ் ஆகும் முத்து | மகாநதி தொடரில் என்ட்ரி கொடுக்கும் திவ்யா கணேஷ் |
கனடாவை சேர்ந்த இந்திய வம்சாவழி நடிகை மற்றும் பாடகி நோரா பதேகி. இசை ஆல்பங்கள் மூலம் புகழ்பெற்ற இவர் 'ரோர்: டைகர் ஆப் தி சுந்தர்பான்ஸ்' என்ற பாலிவுட் படத்தில் அறிமுகமாகி அங்கு ஏராளமான படங்களில் நடித்துள்ளார், 'டெம்பர்' என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமாகி தெலுங்கிலும் ஏராளமான படத்தில் நடித்துள்ளார். ஏராளமான படங்களில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். 'பிக்பாஸ்' உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் பங்கேற்றுள்ளார்.
நோரா பதேகி தற்போது தெலுங்கில் தயாராகும் வருண் தேஜின் 14வது படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தில் ஏற்கெனவே மீனாட்சி சவுத்ரி நாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார். நோரா இன்னொரு நாயகி ஆகியுள்ளார். கருணா குமார் இயக்கவுள்ள இந்த படத்தை வைரா என்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் மோகன் செருக்குறி மற்றும் டாக்டர் விஜேந்தர் ரெட்டி தீகலா ஆகியோர் தயாரிக்கின்றனர். இந்த படத்தின் கதை விசாகப்பட்டினத்தில் 1960களின் காலகட்ட பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது.