ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து தனக்கென தனி இடத்தை உருவாக்கி வைத்துள்ள நடிகர்களில் விஜய் சேதுபதியும் ஒருவர். கடந்த சில வருடங்களாக தமிழில் அவர் நடித்து வெளியான படங்கள் வரவேற்பைப் பெறாமல், வசூல் ரீதியாக தோல்வியையும் தழுவியது.
இருந்தாலும் விஜய் சேதுபதி தற்போது ஹிந்தியிலும் கவனம் செலுத்தி அங்கும் முன்னேறிக் கொண்டிருக்கிறார். ஏற்கெனவே ஹிந்தியில் ஷாகித் கபூர் நடித்த 'பார்சி' வெப் தொடரில் நடித்து வரவேற்பைப் பெற்றார். அடுத்து 'ஜவான்' படத்தில் முக்கிய வில்லனாக நடித்துள்ளார். அப்படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரப் போஸ்டர் நேற்று வெளியானது. அதில், “த டீலர் ஆப் டெத்' என்ற வாசகத்துடன் அவரது அறிமுகப் போஸ்டரை வெளியிட்டார்கள். “மரணத்தின் வியாபாரி” என்ற அந்த வாசகம் மூலம் அவரது கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்பதை ஓரளவிற்கு யூகிக்க முடிகிறது.
படத்தின் இயக்குனர் அட்லி, “சேது ணா சம்பவம் லோடிங்,” என்றும், நாயகன் ஷாரூக்கான், “அவனைத் தடுக்க முடியாது… அப்படி முடியுமா,” என்றும் குறிப்பிட்டு விஜய் சேதுபதியின் போஸ்டரைப் பகிர்ந்துள்ளார்கள்.
தமிழில் 'மாஸ்டர், விக்ரம்' படங்களில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி, தெலுங்கில் 'உப்பெனா' படத்திலும் வில்லனாக நடித்தார். மூன்றுமே வெற்றிப் படங்களாக அமைந்தன. அந்த வரிசையில் 'ஜவான்' படமும் இடம் பிடிக்குமா என்பது செப்டம்பர் 7ம் தேதிதான் தெரியும்.