வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
சமுத்திரக்கனி இயக்கத்தில் தம்பி ராமையா, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்து ஒடிடி தளத்தில் வெளிவந்து வரவேற்பைப் பெற்ற படம் 'விநோதய சித்தம்'. இப்படத்தைத் தெலுங்கில் பவன் கல்யாண், சாய் தரம் தேஜ் நடிக்க 'ப்ரோ' என்ற தலைப்பில் இயக்கியுள்ளார் சமுத்திரக்கனி. இந்த வாரம் ஜுலை 28ம் தேதி இப்படம் வெளியாகிறது. இப்படத்தின் டிரைலர் நேற்று முன்தினம் மாலை யு டியூபில் வெளியானது.
24 மணி நேரத்தில் 19.25 மில்லியன் பார்வைகளைப் பெற்று பவன் கல்யாணின் முந்தைய சாதனைகளை முறியடித்துள்ளது. இதற்கு முன்பு பவன் கல்யாண் நடித்து வெளிவந்த 'வக்கீல் சாப்' திரைப்படத்தின் டிரைலர் 24 மணி நேரத்தில் 18.05 மில்லியன் பார்வைகளைப் பெற்றதே அவரது சாதனையாக இருந்தது. அதை 'ப்ரோ' டிரைலர் முறியடித்துள்ளது.
சமுத்திரக்கனி தெலுங்கில் நடிகராக வெற்றி பெற்றுவிட்டார். ஆனால், அவரது இயக்கத்தில் வெளிவந்த தெலுங்குப் படங்களான “சம்போ சிவ சம்போ, ஜன்ட பை கபிராஜு' ஆகிய படங்கள் தோல்வியைத் தழுவின. 'நாடோடிகள்' படத்தின் தெலுங்கு ரீமேக் தான் 'சம்போ சிவ சம்போ'. 'ஜன்ட பை கபிராஜு' படம் தமிழில் ஜெயம் ரவி நடித்த 'நிமிர்ந்து நில்' படத்தின் ரீமேக்.
'ப்ரோ' டிரைலருக்குக் கிடைத்துள்ள வரவேற்பைப் பார்த்து இப்படம் மூலம் தெலுங்கில் இயக்குனராக சமுத்திரக்கனி வெற்றி பெற்றுவிடுவார் என டோலிவுட் வட்டாரங்களில் இப்போது சொல்ல ஆரம்பித்துவிட்டார்களாம்.