'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
காமெடி கதாபாத்திரங்களை தாண்டி ‛மண்டேலா' போன்ற கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் முதன்மை கதாபாத்திரத்திலும் நடித்து வருபவர் யோகிபாபு. இவர் தற்போது ஜெயிலர், அயலான், எல்ஜிஎம், கங்குவா போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். மேலும், சிம்புதேவன் இயக்கத்தில் முழுக்க முழுக்க கடலில் ஒரு படகில் எடுக்கப்பட்ட ‛போட்' என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
அடுத்ததாக சஜின் கே சுரேந்தர் என்பவர் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார். யோகிபாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளனர். இப்படத்துக்கு 'வானவன்' என தலைப்பிடப்பட்டுள்ளது. படத்தில் காளிவெங்கட், ரமேஷ் திலக், லக்ஷ்மி ப்ரியா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தொழில்நுட்ப குழுவினர் குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை.