எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
'பாகுபலி, ஆர்ஆர்ஆர்' படங்களின் இசையமைப்பாளரான கீரவாணி தற்போது தமிழில் 'சந்திரமுகி 2' படத்திற்கு இசையமைத்து வருகிறார். தமிழில் மரகதமணி என்ற பெயரில் “அழகன், நீ பாதி நான் பாதி, சிவந்த மலர், சேவகன், வானமே எல்லை, ஜாதி மல்லி, கொண்டாட்டம், பிரதாப், ஸ்டூடன்ட் நம்பர் 1” ஆகிய படங்களுக்கு இசையமைத்துளளார்.
ஒரு தமிழ் இயக்குனரின் படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் இசையமைக்கும் 'சந்திரமுகி 2' படம் பற்றிய அப்டேட் ஒன்றை நேற்று கொடுத்துள்ளார்.“சந்திரமுகி 2' திரைப்படத்தைப் பார்த்தேன். இப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள் மரண பயத்தால் தூக்கமில்லாத இரவுகளை கழிக்கின்றனர். என் முயற்சியால் மனதைக் கவரும் காட்சிகளுக்கு கடந்த இரண்டு மாதங்களாக இரவு பகலாக தூக்கமில்லாமல் உயிரைக் கொடுத்துள்ளேன். குரு கிரண், எனது நண்பர் வித்யாசாகர் ஆகியோருக்கு எனக்கு வாழ்த்து சொல்லுங்கள்,” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
பி. வாசு இயக்கத்தில் 2004ல் கன்னடத்தில் வெளியான 'ஆப்தமித்ரா' திரைப்படம்தான் பின்னர் தமிழில் 2005ல் 'சந்திரமுகி' யாக வெளிவந்தது. 'ஆப்தமித்ரா' படத்திற்கு குருகிரண், 'சந்திரமுகி' படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தனர். அந்த இரண்டு படங்களின் வெற்றிக்கும் இசையமைப்பாளர்களது பாடல்களும், பின்னணி இசையும் முக்கிய காரணமாக அமைந்தது.