ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் | அங்கிளான என்னை அண்ணனாக மாற்றிவிட்டார் பஹத் பாசில் ; இயக்குனர் சத்யன் அந்திக்காடு பெருமிதம் |
கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின், 'தோனி என்டர்டெயின்மென்ட்' தயாரிப்பில் உருவாகி உள்ள, எல்.ஜி.எம்., படத்தின் 'டீசர்' வெளியாகி உள்ளது. இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, வெங்கட் பிரபு, யோகி பாபு, வி.டி.வி., கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் வரும், 28ம் தேதி வெளியாகவுள்ளது.
கோவையில் நேற்று நடந்த, எல்.ஜி.எம்., படக்குழுவினரின் செய்தியாளர்கள் சந்திப்பில், நடிகர் ஹரிஷ் கல்யாண் பேசினார். அவர் பேசியதாவது: ''தோனி என்டர்டெயின்மென்ட்' தயாரிப்பில், முதன் முறையாக தமிழில் படம் இயக்கப்பட்டுள்ளது சந்தோஷம். காதல் செய்யும் மகளுக்கும், அம்மாவுக்கும் இடையே தவிக்கும், ஹீரோவை பற்றிய கதை இது. படத்தில் புகைப்பிடிக்கும், மது அருந்தும் காட்சிகள் இல்லை. ஏற்கனவே நடித்த படங்களில் கதைகளுக்கு ஏற்ப காட்சிகள் இருந்ததால், புகைப்பிடிக்கும் காட்சியில் நடித்திருப்பேன். வித்தியாசமான கதாபாத்திரங்கள் அமைந்தால், நடிக்க தயாராக உள்ளேன். பார்க்கிங், டீசல் உள்ளிட்ட படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளன,'' என்றார்.
ஹீரோயின் இவானா, ''லவ் டுடேவுக்கு பிறகு, தோனி தயாரிப்பில் நடிக்கும் போது சந்தோஷமாக இருந்தது. நதியா, ஹரிஷ் போன்ற மூத்த நடிகர்களுடன் நடிக்கும் போது நல்ல அனுபவம் கிடைத்தது,'' என்றார்.