நயன்தாராவுக்கு ரூ.25 கோடி; நாக சைதன்யாவுக்கு ரூ.50 கோடி- நெட்பிளிக்ஸ் திருமண பேரம் | 8ம் ஆண்டு திருமண கொண்டாட்டத்தில் திலீப் - காவ்யா மாதவன் | இளைய மகன் திருமணத்தை அறிவித்த நாகார்ஜுனா | முதல்முறையாக ரீ ரிலீஸ் ஆகும் குணா! | தேவி ஸ்ரீ பிரசாத்தை தொடர்ந்து படங்களில் இருந்து நீக்கும் தயாரிப்பு நிறுவனம்! | சிவகார்த்திகேயன், ஏ. ஆர். முருகதாஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது? | பிளாஷ்பேக்: “கன்னியின் காதலி” தந்த 'கவியரசர்' கண்ணதாசன் | தெலுங்கில் அறிமுகமாகும் விவேக் மற்றும் மெர்வின்! | யாரை சொல்கிறார் திரிஷா? சூசகமாக போட்ட பதிவு! | பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படத்தை தயாரிக்கும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் |
சென்னை : நடிகர் ரஜினி பெயரில் போலி முகநுால் பக்கம் துவங்கி, மோசடியில் ஈடுபட்டு வருவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் அறக்கட்டளையின் அறங்காவலர் சிவராமகிருஷ்ணன் அளித்த மனு : ரஜினி அறக்கட்டளை சார்பில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு, பல்வேறு உதவிகள் செய்து வருகிறோம். தமிழக அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கு பயிலும் மாணவர்களுக்கும், இலவசமாக பயிற்சி அளிக்கிறோம்.
இந்நிலையில், ரஜினி அறக்கட்டளை பெயரில் சிலர், போலி முகநுால் பக்கம் துவங்கி, பரிசு பொருட்கள் வழங்க போவதாகக் கூறி, பலரிடம் பணம் வசூலித்து, மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இது, ரஜினியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது. இம்மோசடியில் ஈடுபட்டு வருவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, புகாரில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.