நயன்தாராவுக்கு ரூ.25 கோடி; நாக சைதன்யாவுக்கு ரூ.50 கோடி- நெட்பிளிக்ஸ் திருமண பேரம் | 8ம் ஆண்டு திருமண கொண்டாட்டத்தில் திலீப் - காவ்யா மாதவன் | இளைய மகன் திருமணத்தை அறிவித்த நாகார்ஜுனா | முதல்முறையாக ரீ ரிலீஸ் ஆகும் குணா! | தேவி ஸ்ரீ பிரசாத்தை தொடர்ந்து படங்களில் இருந்து நீக்கும் தயாரிப்பு நிறுவனம்! | சிவகார்த்திகேயன், ஏ. ஆர். முருகதாஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது? | பிளாஷ்பேக்: “கன்னியின் காதலி” தந்த 'கவியரசர்' கண்ணதாசன் | தெலுங்கில் அறிமுகமாகும் விவேக் மற்றும் மெர்வின்! | யாரை சொல்கிறார் திரிஷா? சூசகமாக போட்ட பதிவு! | பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படத்தை தயாரிக்கும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் |
கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்மகல் இண்டர்நேஷனல் 'ராஜபார்வை' படத்திலிருந்து 'விக்ரம்' படம் வரை ஏராளமான படங்களை தயாரித்துள்ளது. இந்த நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி பணமோசடி நடப்பதாக ராஜ்கமல் நிறுவனத்தின் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தில் நடிப்பதற்கு நடிகை, நடிகர்கள் தேவை, ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என சிலர் போலி விளம்பரத்தை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள். இந்த விளம்பரத்தை நம்பி விண்ணப்பிக்கும் இளம்பெண்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கூகுள் பே மூலமாக பணத்தை அனுப்ப வேண்டுமென மணிகண்டன் என்பவர் சமூக வலைதளத்தில் விளம்பரம் செய்து பண மோசடியில் ஈடுபட்டு வருகிறார். இந்த மோசடியில் சிக்கி ஆகாஷ் என்ற நபர் 42 ஆயிரம் ரூபாய் இழந்த விபரம் எங்களுக்கு தெரியவந்ததால் இந்த புகாரை அளிக்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.