நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதாக கருதப்படுவது செவாலியே விருதாகும். இந்த விருதை ஏற்கெனவே சிவாஜி, அமிதாப் பச்சன் உள்ளிட்ட திரையுலக ஆளுமைகள் பெற்றிருக்கிறார்கள். இந்த வரிசையில் தற்போது பிரபல கர்நாடக இசை பாடகி அருணா சாய்ராம் செவாலியே விருது பெற்றுள்ளார். இந்தியா - பிரான்ஸ் உறவின் வளர்ச்சிக்காக அருணா சாய்ராம் ஆற்றிய பங்களிப்பிற்காகவும் இந்த விருதுக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கர்நாடக இசை உலகின் 'ராக் ஸ்டார்' என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அருணா சாய்ராம் அவ்வப்போது திரைப்பட பாடல்களையும் பாடி உள்ளார். கடைசியாக ஆர்ஜே பாலாஜி, நயன்தாரா நடித்த 'மூக்குத்தி அம்மன்' படத்தில் பாடியிருந்தார். பத்மஸ்ரீ, சங்கீத கலாநிதி உள்ளிட்ட விருதுகளை இதுவரை பெற்றுள்ளார் அருணா சாய்ராம்.
“நான் நடிகர் சிவாஜி கணேசனின் பெரிய ரசிகை; அவரது படங்கள் அனைத்தையும் பார்த்திருக்கிறேன். அவர் பெற்ற விருதை நானும் பெற்றதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். அதை கவுரவமாக கருதுகிறேன். எனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.