கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் | தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் | விக்ரம் உடன் முதல்முறையாக இணையும் அனிருத் | ஹிந்தியில் ரீ-மேக் ஆகும் ‛சங்கராந்திகி வஸ்துனம்' : அக் ஷய் நடிக்க வாய்ப்பு |
நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் மற்றும் பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெயிலர்'. இப்படத்தின் இரண்டாவது பாடலான “ஹுக்கும்” என்ற பாடல் நேற்று மாலை வெளியானது. ஆங்கில வார்த்தைகளும், 'லோக்கலான' வார்த்தைகளும் அதிகம் இடம் பெற்றுள்ள இப்பாடலில் உள்ள சில வரிகளைக் குறிப்பிட்டு ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ரஜினிகாந்த் போன்ற ஒரு சீனியர் நடிகரின் படத்தில் இப்படிப்பட்ட பாடல் வரிகள் இடம் பெறலாமா என்றும் அவர்கள் கேட்கின்றனர். “சூப்பர் ஸ்டார்” பட்டத்திற்கு ஆசைப்படும் சில நடிகர்களைக் குறி வைத்தே அப்பாடல் எழுதப்பட்டுள்ளதாக பலரும் சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
“தலைவரு களத்துல சூப்பர் ஸ்டாருடா”, “உன் அலும்ப பார்த்தவன்”, “இவன் பேர தூக்க நாலு பேரு, பட்டத்த பறிக்க நூறு பேரு,” போன்ற வரிகள் எல்லாம் ரஜினி படப் பாடலில் இடம் பெற்றிருப்பது ஆச்சரியமாக உள்ளது என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதே சமயம் “சூப்பர் ஸ்டார்” பட்டத்திற்கு ஆசைப்படும் இன்றைய நடிகர்களுக்கு ரஜினிகாந்த் இப்பாடல் மூலம் தகுந்த பதிலடி கொடுத்துள்ளதாக ரஜினி ரசிகர்கள் கருதுகிறார்கள்.