சினிமாவுக்கு முழுக்கு போடுகிறாரா த்ரிஷா... | பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் | விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி | லூசிபர் 2ம் பாகத்தின் டீசர் அப்டேட் | பிறந்தநாளில் பிரமாதம்: உடல் உறுப்புகளை தானம் செய்தார் டி.இமான் | கும்பமேளாவில் பாசி மணி ஊசி விற்றவர் : சினிமா நடிகை ஆகிறார் மோனலிசா | பிளாஷ்பேக் : கடைசி வரை அப்பா, தாத்தாவாக நடித்த வி.எஸ்.ராகவன் | துணை நடிகர் ஜெயசீலன் காலமானார் | பிளாஷ்பேக் : தேசிய விருதை இழந்த மீனா | விஷால் உடல்நலம் குறித்து அவதூறு : 3 யு-டியூப் சேனல்கள் மீது வழக்கு |
நேரம், பிரேமம் போன்ற படங்களை இயக்கியவர் அல்போன்ஸ் புத்ரன். அவர் கடைசியாக இயக்கி வெளிவந்த கோல்ட் படம் தோல்வியை சந்தித்தது. இதைதொடர்ந்து தமிழ் படத்தை இயக்குவதாக அறிவித்தார் அல்போன்ஸ். இதை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார் என்று சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தனர். இதில் நடன இயக்குனர் சான்டி ஹீரோவாக நடிக்கிறார். இளையராஜா இசையமைக்கிறார் என்றும் தெரிவித்தனர். சில வாரங்களுக்கு முன்பு இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் தலைப்பை அறிவித்துள்ளனர். அதன்படி படத்திற்கு ‛கிப்ட்' என்று தலைப்பு வைத்துள்ளனர். இளையராஜா இந்த படத்திற்கு 7 பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் அமைக்கிறார். இதோடு ஒரு பாடலை எழுதி, பாடுகிறார். கோவை சரளா, சாஹானா சர்வேஷ், சம்பத் ராஜ், ராகுல், மகாலட்சுமி சுதர்சன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை இயக்குவதை தாண்டி அல்போன்ஸ் புத்ரன் படத்தொகுப்பு மற்றும் கலர் கிரேடிங் பணியும் செய்கிறார் என்று அறிவித்துள்ளனர்.