சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

தெலுங்கு சினிமாவில் புதிய முயற்சியில் வித்தியாசமான படங்களில் நடித்து வருபவர் நடிகர் நிகில் சித்தார்த்தா. சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த ஸ்பை திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வசூலிலும் சுமாரான வசூலைப் பெற்றுள்ளது. இந்த நிலையில் நிகில் தனது ரசிகர்களுக்காக மன்னிப்பு கோரி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, " ஸ்பை படத்திற்கு தந்த ஆதரவிற்கு நன்றி. இந்த படம் தான் எனக்கு நடித்த படங்களிலேயே முதல் நாளில் அதிக வசூலித்த படம். இதன் மூலம் நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை புரிகிறது. ஆனால், எங்களால் சொன்னது போல் இந்த படத்தை தெலுங்கு தவிர தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஒப்பந்த பிரச்சினையால் வெளியிட முடியவில்லை. அமெரிக்காவில் கூட தெலுங்கு பதிப்பு தாமதம் ஆனதால் 350 பிரீமியர் காட்சிகள் ரத்து ஆகியுள்ளது. இதற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுகொள்கிறேன். இனிவரும் படங்கள் சொன்னது போல் மற்ற மொழிகளில் வெளியாகும் என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல் தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு எந்த வித சூழ்நிலையிலும் படத்தின் தரம் குறையாமல் நல்ல படமாக ரசிகர்களுக்கு தருவேன்" என்று குறிப்பிட்டுள்ளார் நிகில்.