சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் |
காமெடியனாக 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் பிரேம்ஜி அமரன். அண்ணன் வெங்கட்பிரபு இயக்கும் படம் அனைத்திலும் அவர் நடித்துள்ளார். :மாங்கா' என்ற படத்தில் கதை நாயகனாக நடித்திருந்தார். தற்போது அவர் மீண்டும் கதை நாயகனாக நடித்துள்ள படம் 'சத்திய சோதனை'. இந்த படத்தை' ஒரு கிடாயின் கருணை மனு' படம் மூலம் இயக்குநராக அறிமுகமான சுரேஷ் சங்கையா இயக்கி உள்ளார். ஸ்வயம் சித்தா, ரேஷ்மா, கு.ஞானசம்பந்தம், 'சித்தன்' மோகன் உட்பட பலர் நடித்துள்ளனர். படம் வருகிற 14ம்தேதி வெளியாகிறது.
படம் பற்றி சுரேஷ் சங்கய்யா கூறியதாவது: இது அருப்புக்கோட்டை பின்னணியில் நடக்கும் கதை. சிறு நகரங்களில் காவல் நிலையம், நீதிமன்றம் எப்படி இயங்குகிறது என்பதை இந்தப் படம் சொல்லும். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை படங்களில் பார்த்த பிரேம்ஜி இதில் தெரியமாட்டார். அவர் ஸ்டைலும் இருக்காது. வித்தியாசமான பிரேம்ஜியை இதில் பார்க்கலாம். பார்வையாளர்கள் கதையோடு தங்களைத் தொடர்புப்படுத்திக் கொள்ள முடியும். என்றார்.