கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் |
மடோன் அஷ்வின் இயக்கத்தில், பரத் சங்கர் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், அதிதி சங்கர், மிஷ்கின், சரிதா மற்றும் பலர் நடிக்கும் 'மாவீரன்' படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகியது.
அப்பாவியான சிவகார்த்திகேயன் ஏதோ ஒரு சக்தியால் அதிரடியாக இறங்கி ஆக்ஷன் ஹீரோவாக அரசியல் செய்யும் கதைதான் இந்த 'மாவீரன்' என டிரைலரைப் பார்க்கும் போது ஓரளவுக்குப் புரிகிறது.
வட சென்னை குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சராசரி இளைஞனராக சிவகார்த்திகேயன். கடந்த சில படங்களில் கொஞ்சம் அடக்கி வாசிக்காமல், லேசான அலட்டலுடன் நடித்த சிவகார்த்திகேயன் இந்தப் படத்தில் மீண்டும் பழைய சிவகார்த்திகேயனாக மாறியிருக்கிறார். மாற்றம் நல்லதே. அரசியல் தலைவராக மிஷ்கின் உருட்டி மிரட்டுகிறார். அதிதி சங்கர் வழக்கமான காதலியாக இருப்பாரோ என்ற சந்தேகம் மட்டும் வருகிறது. சிவகார்த்திகேயனின் நண்பனாக, காமெடியனாக யோகிபாபு சிரிக்க வைப்பார் என்று நம்பலாம்.
“போஸ்டரையே வெறி புடிச்சவன் மாதிரி அடிச்சான், சாதி சொல்லி சொல்லி அடிச்சாங்க, எமனே தவறு செய்தாலும் தட்டிக் கேட்பேன், கட்சிக்காரன்னா என்ன கொம்பா முளைச்சிருக்குது, நான் அரசியல்வாதிடா… உங்க கதையெல்லாம் எழுதறவனே நான்தான்,” என டிரைலரில் உள்ள வசனங்கள், சாதி அரசியலை சொல்லும் படமாகவும் இருக்கும் என காட்டுகிறது. தனது முதல் படமான 'மண்டேலா' படத்திலேயே சாதி அரசியலைப் பேசிய இயக்குனர் மடோன் அஸ்வின் இந்தப் படத்திலும் அதைத் தொட்டிருக்கிறார்.
'தினத் தீ' என்ற பத்திரிகையில் கார்ட்டூனிஸ்ட் ஆக வேலை செய்யும் சிவகார்த்திகேயன் கதாபாத்திரம். டிரைலரின் இடையிடையே அவர் வானத்தை பார்க்கிறார். பிறகு அவருக்கு ஏதோ ஒரு சக்தி கிடைக்கிறது என்பது போல் இந்த டிரைலர் அமைந்துள்ளது. வானத்தில் அவர் என்ன பார்க்கிறார் என்பது படம் வெளியாகும் போது தெரியவரும். இதனைப் பார்க்கும் போது 'ஸ்பைடர்மேன்' படத்தின் ரெபரன்ஸ் இருக்கிறதோ எனத் தோன்றுகிறது.