கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் 'சர்வம் மாயா' | 'வாரணாசி' பட விழா செலவு 27 கோடி, ஸ்ருதிஹாசனுக்கு ஒரு கோடி | பிளாஷ்பேக்: ஒரிஜினலை வெல்ல முடியாத ரீமேக் | பிளாஷ்பேக்: சிவாஜிக்கு ஜோடியாக நடித்த அக்கா, தங்கை | இது மட்டும் நடந்தால் பிசாசு 2 படத்தை நானே ரிலீஸ் செய்வேன் : ஆண்ட்ரியா | கோவா சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது : பாலகிருஷ்ணாவுக்கு கவுரவம் | ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! |

உலக புகழ்பெற்ற பாப் பாடகி மடோனா. ஹாலிவுட் படங்களிலும் பாடி உள்ளார். சில படங்களில் நடித்தும் உள்ளார். 64 வயதான மடோனாவுக்கு கடுமையான பாக்டீரியா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் அவரது நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அவரது மேனேஜர் கய் ஒசியாரி கூறும்போது “மடோனா தீவிரமான பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தற்போது தேறி வருகிறது. இருப்பினும் அவர் பல நாட்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவார். அவர் சிறப்பு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறார். அவரது நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர் நலமாகி திரும்பி வந்ததும் நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து முடிவு செய்வார்” என்றார்.




