மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி | பிளாஷ்பேக்: ஒரே கதையை படமாக்க போட்டிபோட்ட தயாரிப்பாளர்கள் | 'விடாமுயற்சி' செய்யாததை செய்த 'குட் பேட் அக்லி' | இந்த வாரம் ஓடிடி-யில் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி? |
தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டு முறை ஒழிக்கப்பட்டுவிட்டது. கேரளாவில் இன்னும் நடைமுறையில் உள்ளது. பண்டிகை காலங்களில் 10 கோடி பம்பர் பரிசு அறிவித்து லாட்டரி சீட்டை அரசு விற்கிறது. கேரள மாநில எல்லைகளில் வசிக்கும் தமிழர்கள் கேரள மாநில லாட்டரிகளை வாங்குகிறார்கள். அவர்களில் ஒரு சிலருக்கு பரிசு கிடைத்திருக்கிறது. அப்படி கிடைத்தவர்கள் தங்கள் பெயர் விபரங்களை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த பின்னணியில் உருவாகி உள்ள படம்தான் பம்பர்.
தமிழ் மற்றும் மலையாளத்தில் தயாராகி உள்ள இந்த படத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த குடும்பத்திற்கு 10 கோடி பரிசு விழுகிறது. அது யார் என்பதை தேடி ஒரு கூட்டம் அலைகிறது. விஷயம் கசிந்து உறவுக்கூட்டம் முற்றுகிறது. கேரள அரசு பணம் தமிழனுக்கு செல்வதா என்ற பிரச்சினை உருவாகிறது. இறுதியில் நடப்பது என்ன, என்பதுதான் பம்பர் படத்தின் கதை. இதனை காமெடி கலந்து இரு மாநில உணர்வுகளின் பிரச்சினையாக உருவாக்கி உள்ளார் அறிமுக இயக்குனர் செல்வகுமார்.
இப்படத்தை வேதா பிக்சர்ஸ் பேனரில் சு.தியாகராஜா தயாரித்துள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைக்க, ஒளிப்பதிவை வினோத் ரத்தினசாமி கையாண்டுள்ளார். வெற்றி, ஷிவானி ஆகியோர் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். ஹரிஷ் பெரடி முக்கியமான கேரக்டரில் அதாவது லாட்டரி வியாபாரியாக நடித்துள்ளார். வருகிற 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.