''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் மணிமாறன். இவர் ஆதரவற்ற நபர்கள் மரணம் அடைந்து விட்டால் அவர்களின் உடல்களை அரசு மருத்துவமனையில் இருந்து பெற்று அவற்றை நல்லடக்கம் செய்து வருகிறார். கடந்த 21 ஆண்டுகளாக அவர் இந்த சேவையை செய்து வருகிறார். அது மட்டுமின்றி தொழு நோயாளிகளுக்கும் அவர் உதவி செய்து வருகிறார். இதன் காரணமாக மணிமாறனின் சேவையை பாராட்டி மத்திய மாநில அரசுகள் அவருக்கு விருது வழங்கியுள்ளன. கொரோனா காலத்திலும் இறந்தவர்களின் உடல்களை இவர் அடக்கம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் இவரது சேவையை அறிந்து பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த், தற்போது தனது அறக்கட்டளை சார்பில் அவருக்கு ஒரு ஆம்புலன்ஸ் வழங்கியிருக்கிறார். இந்த சேவையை தொடர்ந்து செய்யுமாறும் அவருக்கு ரஜினிகாந்த் ஊக்கமளித்திருக்கிறார்,