தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' | பிளாஷ்பேக் : ரீமேக்கிலும் வெற்றி பெற்ற 'மார்க்கண்டேயா' | டொவினோ தாமஸ், கயாடு லோகரின் பள்ளிச்சட்டம்பி ரிலீஸ் தேதி அறிவிப்பு | சத்தா பச்சா பட முதல் டிக்கெட்டை வாங்கி ஆன்லைன் விற்பனையை துவங்கி வைத்த மோகன்லால் | ரீல்ஸ் வீடியோ மூலம் மம்முட்டிக்கு ஜோடியான பல்கலைக்கழக பெண் அதிகாரி | பிளாஷ்பேக் : சூசைட் பாயிண்ட்டில் ‛நாயகன்' பட நடிகையின் உயிரை காப்பாற்றிய மோகன்லால் | முன்னணி நடிகர்களின் படங்களுக்கு நீண்ட காத்திருப்பு | 100 கோடி கிளப்பில் ‛பராசக்தி' : சிவகார்த்திகேயனுக்கு 5வது படம் |

சமீபகாலமாக குழந்தைகளுக்கான படங்கள் அதிகமாக வெளிவருகிறது. சமீபத்தில் சிறுவன் சாமுவேல், எறும்பு படங்கள் வெளிவந்தது. இந்த வரிசையில் அடுத்து வருகிறது ‛லில்லி'. கோபுரம் ஸ்டூடியோஸ் பாபு ரெட்டி, சதீஷ் குமார் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி என 5 மொழிகளில் தயாரித்துள்ளனர். பேபி நேஹா, வேதாந்த் வர்மா, பிரநதி ரெட்டி, ராஜீவ் பிள்ளை, சிவ கிருஷ்ண காரு, செந்தில் பொன்னுசாமி, ராஜ் வீர், மிட்சிலி ஷா, ஆகியோர் நடித்துள்ளனர். ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஆண்டோ பிரான்சிஸ் இசை அமைத்துள்ளார். சிவம் இயக்கி உள்ளார்.
படம் பற்றி இயக்குனர் சிவம் கூறியதாவது: இது முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான படம். எத்தனையோ பெரிய நடிகர்கள் படம், இயக்குனர்கள் படம் பான் இந்தியா படமாக வெளியாகியிருக்கிறது, ஆனால் குழந்தைகளை மையமாக வைத்து நேரடியாக உருவாகியுள்ள படம் இதுவாகத் தான் இருக்கும். இது குழந்தைகளுக்கான படமாக இருந்தாலும் அவர்களிடமிருந்து பெரியவர்கள் வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்பதோடு நட்புனா என்ன, விட்டுக் கொடுத்தல்னா என்ன என்பதை உணர்வுபூர்வமாக எடுத்திருக்கிறோம்.
இந்த கதையை நான் உருவாக்க முக்கிய காரணமே இயக்குனர் மணிரத்னம்தான். அஞ்சலி படம் பார்த்து இன்றுவரை என்னால் அந்த படத்திலிருந்து வெளியே வரமுடியல அந்த பாதிப்பில்தான் இந்த கதையை உருவாக்கினேன். நிச்சயம் இந்த படம் எல்லோருக்கும் பிடிக்கும் இது வெறும் குழந்தைகளுக்கான படம் மட்டுமல்ல பெரியவர்களுக்குமான படம். இதுவரை ஹாலிவுட் சினிமாவில் மட்டும் தான் டைனோசரை பார்த்துவந்தோம் முதல் முறையாக இந்த படத்தில் டைனோசரை பயன்படுத்தி இருக்கிறோம், அதுவும் ஒரு கதாபாத்திரமாகவே வரும் அதை திரையில் பார்க்கும் போது கதையோடு ஒன்றியிருக்கும். இம்மாதம் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. என்றார் இயக்குனர் சிவம்.




