ஹிந்தி பட வசூலில் நம்பர் 1 சாதனை புரிந்த 'ஸ்திரீ 2' | தனுஷ் இயக்கி, நடிக்கும் இட்லி கடை | ரஜினிகாந்த் - அனிருத் கூட்டணியின் 4வது இசை வெளியீடு | மழைக்காலத்தில் சிக்குகிறதா 'கங்குவா'? | நாளை 'வேட்டையன்' விழா : கதை சொல்வாரா ரஜினிகாந்த் ? | விஜய்யின் இரண்டாவது 400 கோடி படம் 'தி கோட்' | சிவகார்த்திகேயனை தவிப்பில் விட்ட ஏஆர் முருகதாஸ் | அஜித்துடன் நடந்த 10 நொடி சந்திப்பு : கவின் | விஜய்க்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் | நாளை வெளியாகும் வேட்டையன் படத்தின் இரண்டாம் பாடல் |
சுனைனா தற்போது சோலோ ஹீரோயினாக நடித்து வரும் படம் ரெஜினா. டோமின் டிசில்வா எழுதி இயக்கிய திரில்லர் படம். நிவாஸ் ஆதித்தன், குத்துச்சண்டை வீரர் தீனா, ராகுல் ராமகிருஷ்ணன், கஜராஜ் மற்றும் அனந்த் நாக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பவி கே.பவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சதீஷ் நாயர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் கேரளாவில் உள்ள தொடுபுழாவை மலைப்பகுதிகளில் நடந்தது. அங்கு வாகனங்கள் செல்ல முடியாததால் மொத்த படக்குழுவும் படப்பிடிப்பு தளத்தை அடைய சில மைல் தூரம் நடக்கவேண்டி இருந்தது. நடிகை சுனைனாவும் தான் கொண்டுவந்த பொருட்களை தூக்கிக்கொண்டு படக்குழுவினருடன் சேர்ந்து நடந்தே சென்றார். இப்படி பல நாட்கள் படமாக்கப்பட்டது.
“நடிகை சுனைனாவிடம் இருக்கும் பண்புகளில் முக்கியமானதே அவர் கதையையும் கதாபாத்திரங்களையும் சரியாக தேர்ந்தெடுத்து நடிப்பவர் என்பது தான். அதுமட்டுமல்ல, அவர் தேர்ந்தெடுக்கும் படங்கள் அவரது சிறப்பான நடிப்பிற்காக அவருக்கு பாராட்டுகளையும் வென்று தந்திருக்கின்றன. அவரது அற்புதமான நடிப்பையும் தாண்டி, படப்பிடிப்பில் அவரது அர்ப்பணிப்பு பாராட்டுக்குறியது” என்கிறார் தயாரிப்பாளர் சதீஷ் நாயர்.