அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
கடந்த 1982ம் ஆண்டில் இயக்குனர் வி.சி.குகநாதன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த திரைப்படம் தனிக்காட்டு ராஜா. ஸ்ரீதேவி, சில்க் சிமிதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்த இப்படத்தை சுரேஷ் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்தனர். அந்த காலகட்டத்தில் இப்படம் விமர்சனம் ரீதியாக வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனாலும் இதுவரை இந்த படம் எந்த ஒரு தனியார் சேனல்களிலும் ஒளிபரப்பு ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில மாதங்களாக இந்த படம் ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் கடந்த ஜூன் 17ம் தேதி அன்று தமிழகமெங்கும் சில முக்கிய திரையரங்குகளில் மட்டும் ரீ மாஸ்டர் செய்து டிஜிட்டல் முறையில் வெளியானது. இதனை திருச்சி, மதுரை பகுதிகளில் உள்ள ரஜினி ரசிகர்கள் பட்டாசு வெடித்து, பால்குடம் மற்றும் நோட்டு புத்தகம் விநியோகம் செய்து புதிய படம் வெளியானது போல் கொண்டாடி வருகின்றனர்.