அவதூறு பரப்பாதீங்க; ரஹ்மான் அற்புதமானவர் - சாய்ரா பானு ஆடியோ வெளியீடு | சூர்யா 44வது படத்தின் புரமோஷனை தொடங்கிய கார்த்திக் சுப்பராஜ் | விவசாயிகளுக்கு விருந்து கொடுத்த நடிகர் விஜய்! | சொர்க்கவாசல் வெளியான பிறகு கைதி-2 கதையை மாற்றுவேன்! -லோகேஷ் கனகராஜ் | தைரியம் காட்டும் அரசியல்வாதி விஜய்: மடோனா சிறப்பு பேட்டி | வெல்லும் வரை காத்திரு: நடிகை குயின்சி ஸ்டான்லி | சிவராஜ் குமாரின் ‛பைரதி ரணங்கள்' நவ. 29ல் தமிழில் ரிலீஸ் | ‛குட் பேட் அக்லி' படத்தை விட்டு வெளியேறிய தேவி ஸ்ரீ பிரசாத்! | தனுஷ் படத்தில் இணைந்த பவி டீச்சர்! | நான் உயிரோடு உள்ளவரை புதுப்பேட்டை 2 முயற்சி தொடரும் - செல்வராகவன்! |
பாலிவுட் இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில், தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில், ராமாயணத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள ஆதிபுருஷ் படம், கடந்த 16ம் தேதி நாடு முழுதும் வெளியானது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி உள்ள இப்படம், கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. படத்தில் ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் சில வசனங்கள் இடம் பெற்றுள்ளதாக, படத்தை பார்த்தவர்கள் சமூக ஊடகங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
இது குறித்து படத்தின் வசனகர்த்தா மனோஜ் முன்டாஷிர் சுக்லா நேற்று கூறுகையில், 'என்னைப் பொறுத்தவரை ரசிகர்களின் உணர்வுகளை விட பெரியது எதுவுமில்லை. நான் எழுதிய வசனங்களை நியாயப்படுத்த முடியும், ஆனால் அது, உங்கள் வலியைக் குறைக்காது. உங்கள் உணர்வுகளை புண்படுத்தும் வசனங்களை திருத்துவது என, நானும், படத் தயாரிப்பாளரும், இயக்குனரும் முடிவு செய்துள்ளோம். திருத்தப்பட்ட வசனங்கள், இந்த வாரம் படத்தில் சேர்க்கப்படும்' என்றார்.
இந்த நிலையில் மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகையில், ''சிபிஎப்சி (சென்சார் வாரியம்) இது குறித்து முக்கிய முடிவெடுத்துள்ளது. யாருடைய மனதையும் புண்படுத்த யாருக்கும் உரிமை இல்லை. கண்டனத்தை எழுப்பி உள்ள வசனங்களை நீக்குவது குறித்து, இயக்குனருடன் பேச்சுவார்த்தை நடந்துள்ளது'' எனக் கூறினார்.