பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? | ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூல் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | விஜய் நிதானமாக முடிவெடுக்க வேண்டும்: சிவராஜ்குமார் வேண்டுகோள் | 60 கோடி செலுத்த ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ராவுக்கு நீதிமன்றம் உத்தரவு | நயன்தாரா, கவின் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு | திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் |
தமிழ், தெலுங்கில் பல வெற்றிப் படங்களில் நடித்தவர் காஜல் அகர்வால். திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்ற பின்பும் தொடர்ந்து கதாநாயகியாக நடித்து வருகிறார். தற்போது தமிழில் 'இந்தியன் 2' படத்திலும், தெலுங்கில் 'பகவாந்த் கேசரி, சத்யபாமா' ஆகிய படங்களிலும் படத்திலும் நடித்து வருகிறார்.
இன்று காஜல் அகர்வாலின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் தற்போது நடித்து வரும் 'சத்யபாமா' படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டது. அதற்காக நடந்த விழாவில் காஜல் அகர்வால் பேசகையில், “தெலுங்கு சினிமா நான் பிறந்த ஊர் மாதிரி. தெலுங்கு ரசிகர்கள்தான் நிஜமாகவே சிறந்தவர்கள். உங்களால்தான் நான் இங்கு இருக்கிறேன். உங்கள் ஆதரவு இல்லாமல், வரவேற்பு இல்லாமல் உங்கள் அன்பு இல்லாமல் இப்படி இருக்க முடியாது,” என்று பேசினார்.
2007ம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த 'லட்சுமி கல்யாணம்' என்ற படத்தின் மூலம்தான் காஜல் அகர்வால் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். 2008ல் தமிழில் வெளிவந்த 'பழனி' படம் மூலம் இங்கு அறிமுகமானவர் தொடர்ந்து 16 வருடங்களாக கதாநாயகியாகவே தொடர்கிறார்.
இன்று காஜல் அகர்வாலின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் பலரும், திரையுலகினரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.