வதந்தி வெப் தொடர் 2ம் பாகத்தில் சசிகுமார்? | ஜனநாயகன் படத்துடன் வெளியாகும் இரு படங்கள் | மனோஜ் பாரதி உடல் தகனம் : அரசியல் தலைவர்கள், திரையுலகினர் அஞ்சலி | மூக்குத்தி அம்மன் 2 ; சுந்தர்.சி, நயன்தாரா மோதலா? : குஷ்பூ வெளியிட்ட தகவல் | பிரதீப் ரங்கநாதனின் புதிய படம் | ஜேசன் சஞ்சய் படத்தின் கதாநாயகி இவரா? | சமந்தாவின் நிறைவேறாத ஆசை | டூரிஸ்ட் பேமிலி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் | புஷ்பா 2 இயக்குனருக்கு இப்படி ஒரு மகளா? ஓடிடி-யில் கலக்கும் படமாக இருக்குமா |
ஓம் ராவத் இயக்கத்தில், பிரபாஸ், கிரித்தி சனோன், சைப் அலிகான் மற்றும் பலர் நடித்த 'ஆதிபுருஷ்' படம் கடந்த வெள்ளியின்று உலகம் முழுவதும் வெளியானது. தெலுங்கு, ஹிந்தி மாநிலங்களில் மட்டும் இப்படத்திற்கு மிகப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழகம், கேரளா மாநிலங்களில் மட்டும் இப்படத்திற்கு எதிர்பார்த்ததை விட மிகக் குறைவான வசூலே கிடைத்துள்ளதாம். மூன்றே நாட்களில் 300 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
சுமார் 240 கோடி வரை தியேட்டர்களுக்கான வியாபாரம் நடந்துள்ள நிலையில் இன்னும் 100 கோடி வரை வசூலித்தால் இப்படம் லாபத்தைக் கொடுத்துவிடும் நிலை உள்ளது. இந்த வாரத்திற்குள் அந்த 100 கோடியும் கிடைத்துவீடும் என்கிறார்கள்.
தெலுங்கு மாநிலங்களில் மட்டும் இப்படம் 100 கோடியை வசூலித்துள்ள நிலையில் ஹிந்தியில் 55 கோடி வரை வசூலித்துள்ளதாம். படத்திற்கு இருவிதமான விமர்சனங்கள் வந்ததால்தான் வசூலில் புதிய சாதனை படைக்க முடியவில்லை. அது மட்டுமல்லாமல் மோசமான விஎப்எக்ஸ் தொழில்நுட்பம் படத்தின் வசூல் பாதிப்படைய காரணமாக அமைந்துள்ளது.
'சாஹோ, ராதேஷ்யாம்' என இரண்டு தோல்விகளுக்குப் பிறகு பிரபாஸின் மார்க்கெட்டை இந்தப் படம் மீட்டெடுத்துள்ளது.