'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
விஜய் நடித்த 'வாரிசு' படத்தின் கதாநாயகியான ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது அல்லு அர்ஜுனுடன் 'புஷ்பா 2' படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே, தன்னுடைய ஆரம்ப காலத்திலிருந்து இருந்த மேனேஜரை அவர் நீக்கிவிட்டதாக ஒரு செய்தி வந்து தெலுங்கு திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஷ்மிகாவிடம் அவர் 80 லட்ச ரூபாய் மோசடி செய்துள்ளதாக சில ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. ஆனால், இது குறித்து ராஷ்மிகா இதுவரை எந்த ஒரு புகாரையும் தெரிவிக்கவில்லை. அவரே இந்தப் பிரச்னையை பேசித் தீர்த்துக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. தன்னுடன் நீண்ட காலமாக இருந்தவர் என்பதால் ராஷ்மிகா இதைப் பெரிதாக்க விரும்பவில்லை என்றும் சொல்கிறார்கள்.
ராஷ்மிகா தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் 'ரெயின்போ' படத்திலும் நடித்து வருகிறார்.