பெரிய பட்ஜெட்டில் 3டி அனிமேஷனில் தயாராகும் பெருமாளின் அவதாரங்கள் | வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன் | 'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் | 5 மொழிகளில் வெளியாகும் நரசிம்மர் படம் |
கவுதம் மேனன் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில், கமல்ஹாசன், ஜோதிகா, கமலினி முகர்ஜி, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி மற்றும் பலர் நடித்து 2006ம் ஆண்டு வெளியான படம் 'வேட்டையாடு விளையாடு'. பரபரப்பான க்ரைம் திரில்லராக வெளியான இந்தப் படம் தற்போது 'ரீமாஸ்டர்ட்' செய்யப்பட்டு புதுப் பொலிவுடன் அடுத்த வாரம் ஜுன் 23ம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்திற்காக காலை 8 மணிக்கு சில சிறப்புக் காட்சிகள் நடைபெற உள்ளது. பொதுவாக புதிய படங்கள் வெளியாகும் போதுதான் இப்படி காலை 8 மணி காட்சிகள் நடைபெறும். ஆனால், 17 வருடங்களுக்கு முன்பு வெளியான ஒரு படம் மீண்டும் வெளியாகும் போது இப்படி சிறப்புக் காட்சிகள் நடைபெறுவது அதிசயம் தான்.
ரி--ரிலீஸ் என அழைக்கப்படும் பழைய படங்களின் மறு வெளியீடுகள் கடந்த பல வருடங்களாகவே நின்று போய்விட்டது. இருந்தாலும் சில பழைய படங்களை ஒளி, ஒலியில் இந்தக் காலத் தொழில்நுட்பங்களுடன் சேர்த்து மீண்டும் வெளியிடுவதற்கு குறிப்பிடத்தக்க வரவேற்பு கிடைத்து வருகிறது.