நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் | கணவர் சித்ரவதை செய்வதாக பாலிவுட் நடிகை வழக்கு | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை | தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா | கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் | கதைநாயகன் ஆன பரோட்டா முருகேசன் | இந்த வார ரீ ரிலீஸில், 'அட்டகாசம், அஞ்சான்' | ஓடிடி தளத்திலும் வெளியாகும் 'பாகுபலி தி எபிக்' |

நெல்சன் இயக்கத்தில் ரஜினி, ரம்யா கிருஷ்ணன், தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் உட்பட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் ஜெயிலர். பல மாதங்களாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இந்த நிலையில் தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறது. முதல் கட்டமாக இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள விநாயகன் டப்பிங் பேசி வருகிறார். அது குறித்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் நடித்து வருவதால் அந்த படத்தை முடித்துவிட்டு அவர் தனக்கான டப்பிங்கை பேசுவார் என்றும் கூறப்படுகிறது. மேலும் இப்படத்துக்காக அனிருத் இசையில் உருவாகியுள்ள இரண்டு பாடல்கள் மற்றும் ஒரு தீம் மியூசிக் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.