தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

ரஜினி மகள் ஐஸ்வர்யாக இயக்கி வரும் படம் 'லால் சலாம்'. இந்த படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால், செந்தில், தம்பி ராமய்யா நடிக்கிறார்கள். இது கிரிக்கெட்டை மையமாக கொண்ட படம். இந்த படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். மும்பையில் வாழும் தாதா மொய்தீன் பாய் கேரக்டரில் அவர் நடிக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் திருவண்ணாமலை, மும்பை பகுதிகளில் நடந்தது. தற்போது புதுச்சேரியில் நடந்து வருகிறது. இதில் ரஜினி கலந்து கொண்டு நடித்து வருகிறார். படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடினார்கள். ரஜினியும் ரசிகர்கள் முன் தோன்றி அவர்களின் ஆசையை நிறைவேற்றி வைத்தார்.
மக்கள் கூடினாலும் படப்பிடிப்புகள் ரகசியமாக நடந்தது. என்றாலும் தற்போது படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் இணையதளத்தில் கசிந்துள்ளது. இதில் ரஜினி மொய்தீன் பாய் கெட்-அப்பில் இருக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது. செல்போனில் எடுக்கப்பட்ட இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.




