நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சென்னையில் படித்து, வளர்ந்து, தமிழ் படம் இயக்கினாலும் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனின் பூர்வீகம் கேரளா. தமிழில் மின்னலே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அதன் பிறகு காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துசரம், வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா? நீதான என் பொன் வசந்தம், என்னை அறிந்தால் உள்ளிட்ட பல படங்களை இயக்கினார். அவர் இயக்கிய துருவ நட்சத்திரங்கள் படம் இன்னும் வெளிவரவில்லை.
தற்போது படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் முதன் முதலாக தனது சொந்த மொழியில் படம் இயக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: மலையாளத்தில் மம்மூட்டியுடன் 'பஜூக்கா' என்ற படத்தில் நடித்திருக்கிறேன். மம்மூட்டியிடம் கற்றுக்கொள்ளலாம் என்பதற்காகவே இந்தப் படத்தை ஒப்புக்கொண்டேன். அவருடன் நடித்த 10 நாட்களும் சிறந்த அனுபவம். மலையாளத்தில் பெரிய நடிகர்கள் கூட சாதாரண கேரக்டர்களில் நடிக்கிறார்கள். அடுத்த வருடம் மலையாளத்தில் படம் இயக்குவேன். அதற்காக பேசி வருகிறேன். என்றார்.