ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் தயாரிக்கும் படம் 'வள்ளி மயில்'. இப்படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்க, பரியா அப்துல்லா நாயகியாக நடிக்கிறார். பாரதிராஜா, சத்யராஜ், 'புஷ்பா' சுனில், தம்பி ராமையா, ஜி.பி.முத்து நடிக்கின்றனர். சுசீந்திரன் இயக்குகிறார். இமான் இசை அமைக்கிறார், வாஞ்சிநாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.
1980களில், நாடக கலையின் பின்னணியில் நடக்கும் த்ரில்லர் படமாக இது உருவாகிறது. இதில் விசாரணை அதிகாரியாக விஜய் ஆண்டனி நடிக்கிறார். நாடக குழு தலைவராக பாரதிராஜா நடிக்கிறார். 1980 கால கட்ட கதை என்பதால் திண்டுக்கல் நகரில் அந்த காலகட்ட பின்னணியைக் கொண்டு வரும் வகையில், பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது. தொடர்ந்து, கொடைக்கானல், சிறுமலை, பழநி, மதுரை, திருநெல்வேலி மற்றும் தென்தமிழ் நாட்டின் பல பகுதிகளில் நடந்தது.
தற்போது படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு திண்டுக்கல் அருகே உள்ள கிராமத்தில் நடந்து வருகிறது. இங்கு தொடர்ந்து 24 நாட்கள் படப்பிடிப்பு நடக்கிறது. இந்த மாதத்துடன் படப்பிடிப்புகள் முடிந்து அதற்கு பிந்தைய பணிகள் சென்னையில் நடக்க இருக்கிறது. இந்த ஆண்டிற்குள் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.