என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
சித்தார்த், திவ்யன்ஷா, அபிமன்யூ சிங், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்த 'டக்கர்' படம் தமிழ், தெலுங்கில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இதனை கப்பல் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த கார்த்திக் ஜி.கிரிஷ் இயக்கி இருந்தார். இவர் மயிலாடுதுறையை சேர்ந்தவர். படத்தின் வெளியீட்டுக்கு பிறகு சொந்த ஊருக்கு சென்ற அவருக்கு பொதுமக்களும், ரசிகர்களும் இணைந்து மேளதாளம் முழங்க, பட்டாசு வெடித்து, நடனமாடி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து, மயிலாடுதுறை விஜயா திரையரங்க வளாகத்தில் இயக்குனர் கார்த்திக் ஜி கிரிஷ்க்கு பாராட்டு விழா நடைபெற்றது. தொடர்ந்து திரையரங்கில் ரசிகர்களுடன் இயக்குனர் கார்த்திக் ஜி. கிரிஷ் படம் பார்த்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உலகம் முழுவதும் 9ஆம் தேதி திரையிடப்பட்டுள்ள டக்கர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பல்வேறு பகுதிகளில் குடும்பம் குடும்பமாக சென்று திரைப்படத்தை பார்த்து ரசிகர்கள் மிகப்பெரிய ஆதரவை இந்த படத்திற்கு வழங்கி இருக்கிறார்கள். குறிப்பாக எனது சொந்த ஊரான மயிலாடுதுறையில் ரசிகர்களும், பொதுமக்களும் எனக்கு உற்சாக வரவேற்பு அளித்து எனது திரையுலக பயணத்திற்கு பாராட்டு தெரிவித்து, வாழ்த்திய அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
டக்கர் திரைப்படம் இக்கால தலைமுறைக்கு ஏற்ற வகையில் அனைவரது ஒத்துழைப்புடன் தயாரிக்கப்பட்டு திரைக்கு வந்துள்ளது. இதில் கதாநாயகனாக சித்தார்த் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர்கள், தயாரித்துள்ள பேஷன் ஸ்டுடியோ மற்றும் அனைவருடைய ஒத்துழைப்போடு மிகச்சிறந்ததொரு படமாக டக்கர் திரைப்படம் ரசிகர்களுக்கு நிறைவு தரும் விதத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ஆதரவளித்து வரும் ரசிகர்களுக்கு என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். ரசிகர்களோடும் பொதுமக்களோடும் திரைப்படத்தை கண்டு களித்தது மிகப்பெரிய நிறைவை தருகிறது. என்றார்.