சினிமாவில் 20 ஆண்டுகள்: பயணம் முடியவில்லை என்கிறார் ரெஜினா | அடுத்த பட அறிவிப்பில் தாமதிக்கும் அஜித், விக்ரம், சிவகார்த்திகேயன் | இரண்டு மாத 'வசூல் வறட்சி'யை சமாளித்த 'பைசன், டியூட்' | இசையமைப்பாளர் சபேஷ் காலமானார் | மனோரமாவின் மகன் பூபதி காலமானார் | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் 3 மொழிகளில் ஹீரோயினாக நடித்த வைஜயந்திமாலா | பிளாஷ்பேக்: அருணாச்சலம் முன்னோடி 'பணம் படுத்தும் பாடு' | என்னது, பாகுபலி பிரபாஸ் வயது 46 ஆ? | 2ம் பாக ஜுரம் தான் மலைக்கோட்டை வாலிபன் தோல்விக்கு காரணம் : தயாரிப்பாளர் சொன்ன புது தகவல் | எதிர்த்துப் போட்டியிட்ட வில்லன் நடிகரையும் உதவிக்கு இணைத்துக் கொண்ட ஸ்வேதா மேனன் |
பாலிவுட்டில் கடந்த 20 வருடங்களாக தனக்கென ஒரு நிலையான இடத்தை தக்க வைத்துக்கொண்டு முன்னணி நடிகையாகவே வலம் வருபவர் நடிகை கத்ரீனா கைப். தற்போது கூட சல்மான்கான் நடித்துவரும் டைகர் 3 படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். தான் காதலித்து வந்த பாலிவுட் நடிகர் விக்கி கவுசலை கடந்த 2021ல் திருமணம் செய்து கொண்டார் கத்ரீனா கைப். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கணவன் மனைவி இருவரும் ஜோடியாக கலந்து கொண்டனர்.
அப்போது விக்கி கவுசலிடம் உங்களது திரைப்படங்கள் குறித்து கத்ரீனா கைப் என்ன விதமான ஆலோசனைகள் சொல்லுவார் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த விக்கி கவுசல், “கதையில் பெரிதாக நானோ அவரோ தலையிட்டு கொள்ள மாட்டோம். ஆனால் என்னுடைய நடன ரிகர்சல் வீடியோக்களை என்னிடம் போட்டுக் காண்பித்து அதில் 36 ஆயிரம் குறைகளை சொல்லி அதை எல்லாம் சரி செய்து கொண்டு நடனம் ஆடுங்கள் என்று ஆலோசனை சொல்வார். அந்த அளவுக்கு நடனத்தில் பர்பெக்சன் பார்ப்பார்” என்று கூறியுள்ளார் விக்கி கவுசல்.