அடுத்தடுத்து திரைக்கு வரும் திரிஷா படங்கள் | மார்ச் 12ல் வெளியாகும் மேட் இன் கொரியா | தெலுங்கில் பிஸியாகும் ருக்மணி வசந்த் | சர்வதேச விருதினை வென்ற ‛பூங்' படக்குழுவை பாராட்டிய பிரதமர் மோடி | திரிஷ்யம் 3 படத்தில் நடிக்க மறுத்த வெங்கடேஷ் | 20 ஆண்டுகளுக்கு பின் தென்னிந்திய படத்தில் சஞ்சீதா ஷேக் ரீஎன்ட்ரி | மீண்டும் இணையும் ‛மை லார்ட்' கூட்டணி | புருஷன் படப்பிடிப்பு துவங்கியது | உதய்ப்பூர் புகைப்படங்களை தனித்தனியே பகிரும் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா | புது முகங்களின் 'ஹைக்கூ ' |

ராதே ஷ்யாம் படத்தை அடுத்து பிரபாஸ் நடிப்பில் வருகிற 16ம் தேதி திரைக்கு வர உள்ள படம் ஆதிபுருஷ். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ள இந்த படம் ராமாயணத்தை மையமாகக் கொண்ட கதையில் உருவாகி இருக்கிறது. இதில் பிரபாஸ், ராமர் வேடத்திலும், கிர்த்தி சனோன் சீதையாகவும், ராவணனாக சைப் அலிகானும் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் பிரபாஸ். இந்த நிலையில் ஆதிபுருஷ் படத்தில் ராமராக நடித்துள்ள பிரபாஸுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் நன்றி தெரிவித்து பதிவு போட்டுள்ளார். அதில், ஆதிபுருஷ் படக்குழுவுக்கு எனது வாழ்த்துக்கள். ஒரு பான் இந்தியா நடிகராக இருந்து கொண்டு ராமர் வேடத்தில் நடித்துள்ள பிரபாஸுக்கு என்னுடைய நன்றி. இளைய தலைமுறைக்கு ராமாயணத்தை கொண்டு சேர்ப்பது மிகப்பெரிய சாதனை. இந்த படம் பெரிய அளவில் வெற்றி அடைய பிரார்த்தனை செய்கிறேன். ஹரே ராம் என்று பதிவிட்டுள்ளார் ராகவா லாரன்ஸ்.