2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

90களில் அனைவரையும் கவர்ந்த சூப்பர் ஹீரோ சக்திமான் தொடர் தூர்தர்ஷனில் சில ஆண்டுகள் ஒளிபரப்பாகி வரவேற்பை பெற்றது. இதில் சக்திமான் கதாபாத்திரத்தில் முகேஷ் கண்ணா நடித்திருந்தார். சில வருடங்களுக்கு முன்பு சக்திமான் தொடரை பிரமாண்டமான படமாக தயாரிக்க இருக்கிறோம் என்றும், அது இந்த காலத்துக்கு பொருத்தமான கதையாக இருக்கும் என முகேஷ்கூறியிருந்தார். ஆனாலும் அடுத்த கட்டத்திற்கு படம் நகரவில்லை.
தற்போது இந்த படத்தை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இது குறித்து சமீபத்தில் முகேஷ் கண்ணா கூறுகையில்; "சக்திமான் தொடர் இப்போது ரூ.300 கோடி பட்ஜெட்டில் சர்வதேச தரத்தில் சினிமா படமாக உருவாக இருக்கிறது. கொரோனாவால் தான் இந்த படம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. அதேபோல் சக்திமான் கதாபாத்திரத்தில் நான் நடிக்கவில்லை. தேவையில்லாமல் எந்த ஒப்பிடும் இருக்க கூடாது என்பதற்காக சிறப்பு தோற்றத்திலும் நான் நடிக்கவில்லை. இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள், இயக்குனர் விவரம் குறித்து விரைவில் தகவல் வெளியாகும்'' என இவ்வாறு தெரிவித்துள்ளார்.