கடும் போட்டியை சந்திக்கப் போகும் 'ஜனநாயகன்' | 'ஸ்பைடர்' தோல்வி என் பயணத்தைத் தடுத்தது : ரகுல் ப்ரீத் சிங் | 'கைதி 2' எப்போது ஆரம்பமாகும் ? | நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி |

மலையாளத்தில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு மின்னல் முரளி என்கிற திரைப்படம் வெளியானது. டொவினோ தாமஸ் மற்றும் குரு சோமசுந்தரம் இருவரும் இணைந்து நடித்த இந்தப்படம் சூப்பர்மேன் கதையம்சத்துடன் உருவாகி இருந்தது. இயக்குனர் பஷில் ஜோசப் இந்த படத்தை இயக்கி இருந்தார். கிராமத்தில் இருக்கும் ஒரு சாதாரண மனிதர்களுக்கு திடீரென சூப்பர் மேன் பவர் கிடைக்கும்போது அவர்களுக்கு இடையே ஏற்படும் மோதலையும் அதன் விளைவுகளையும் மையப்படுத்தி வித்தியாசமான முறையில் இந்த படத்தை படமாக்கி இருந்தார்.
இந்த படத்தை பார்த்துவிட்டு பாலிவுட்டில் இருந்து கூட பலரும் பஷில் ஜோசப்பை பாராட்டினார்கள். இந்த நிலையில் தான் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் சக்திமான் என்கிற படத்தை பஷில் ஜோசப் இயக்க உள்ளார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து மின்னல் முரளியாக நடித்த டொவினோ தாமஸும் ஒரு பேட்டியில் சூசகமாக உறுதி செய்துள்ளார். ஆனாலும் இந்த படம் அடுத்த வருடம் தான் துவங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.