'நந்தி விருதுகள்' பெருமையை மீட்க விரும்பும் ஆந்திரா | சத்தங்களுக்கு மத்தியில் புதிய விடியலை நோக்கி பயணம் : கெனிஷாவின் பதிவு வைரல் | நடிகர் ஹம்சவர்தன் 2வது திருமணம் | ஒரு காட்சிக்காக படத்தின் மொத்த உரிமத்தையும் வாங்கிய 'ஜனநாயகன்' படக்குழு | கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட ருக்மணி வசந்த் | கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? |
ராதா மோகன் இயக்கத்தில் எஸ் .ஜே .சூர்யா, பிரியா பவானி சங்கர், சாந்தினி தமிழரசன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பொம்மை. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படம் ஜூன் 16ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் இரண்டாவது டிரைலர் தற்போது வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது. இந்த டிரைலரில் பொம்மைகள் மீது அதீத ஆசையுடன் இருக்கும் எஸ்.ஜே.சூர்யா அந்த பொம்மைகளுக்கு ஏதாவது ஒன்று நேர்ந்தால் தான் ஆவேசமாகி விடுகிறார். அப்படி ஒரு கற்பனை உலகத்தில் அவர் வாழ்ந்து வருகிறார். ஒரு கட்டத்தில் அந்த கற்பனை உலகத்தில் அவர் லிமிட் தாண்டி சென்று விடுகிறார். இதையடுத்து என்னென்ன விபரீதங்கள் ஏற்படுகிறது என்பதுதான் இந்த பொம்மை படத்தின் கதை என்பது அந்த டிரைலரில் தெரிகிறது. அதோடு எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கரின் லிப்லாக் காட்சியும் இடம்பெற்றுள்ளது. அந்த வகையில் இந்த பொம்மை படத்தின் டிரைலர் எதிர்பார்ப்புகளை தூண்டிவிடும் வகையில் அமைந்திருக்கிறது.