ரஜினி படத்துடன் மோதுகிறது சூர்யா 47 படம் | சர்வம் டெலுலு எப்படி சர்வம் மாயா ஆனது : இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்யம் | இரவில் ரஜினி உடன் பைக் ரைட் : ராதிகா சொன்ன பிளாஷ்பேக்... | 100 ஆண்டுக்கு அப்புறம் தான் ரிலீஸ்; ஆனா இப்பவே படம் 'ரெடி': ஹாலிவுட்டில் புது கூத்து! | ‛ஜெயிலர் 2' சஸ்பென்ஸை உடைத்த சிவராஜ் குமார் | சாதனை விலைக்கு விற்கப்பட்டதா 'டாக்சிக்' வெளிநாட்டு உரிமை ? | மீனவர் பிரச்னையை தனித்துவமாக பேசும் 'வலை': இரட்டை வேடங்களில் நடிக்கிறார் அதர்வா | வையாபுரிக்கு ஜோடியான ‛பிக்பாஸ்' தாமரை | இளையராஜா இசையமைக்கும் ‛சைலப்பன் சைக்களிள் மார்ட்' | சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் 17ம் தேதி ஆஜராக நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத்துறை சம்மன் |

விக்ரம் நடிப்பில் தற்போது தங்கலான் படத்தை இயக்கி வருகிறார் ரஞ்சித். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. விக்ரம் உடன் மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மாமன்னன் பட விழாவில் பேசிய ரஞ்சித், ‛‛பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கி உள்ள இந்த படம் அவருக்கு ஒரு மைல் கல் படமாக இருக்கும். இப்படத்திலும் அவர் ஒரு அரசியல் பேசி இருக்கிறார். விக்ரம் தற்போது பூரண நலமடைந்து விட்டார். அதனால் தங்கலான் படப்பிடிப்பு வருகிற 15-ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப் போகிறது. இன்னும் 12 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ளது. அடுத்து சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப் போகிறேன். அந்த படத்தின் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்க உள்ளது என்றார்.




