திரைப்பட தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார் | ரஜினி 170வது படத்தில் இணைந்த மஞ்சு வாரியர் | அக்., 5ல் ‛லியோ' டிரைலர் வெளியீடு | வாழை படத்தை எதிர்பார்க்கும் திவ்யா துரைசாமி | 'லியோ' வெளியீட்டிற்குப் பிறகு 'விஜய் 68' பூஜை புகைப்படங்கள் | சர்வதேச திரைப்பட விழாக்களில் ஸ்ருதிஹாசனின் ‛தி ஐ' ஹாலிவுட் படம் | ரஜினி 170வது படத்தில் இணைந்த ரித்திகா சிங் | ‛சித்தா' மிகச்சிறந்த சினிமா : கோவையில் சித்தார்த் நம்பிக்கை | விஜய் 68ல் உள்ள முதல் பாடலின் சிறப்பு அம்சம் | ஒன் டூ ஒன் முதல் பார்வை வெளியீடு |
நடிகர் ராமராஜன் 80 காலகட்டத்தில் கரகாட்டகாரன், எங்க ஊரு பாட்டுகாரன் போன்ற பல கிராமத்து படங்களை கொடுத்து கிராமத்து நாயகனாக வலம் வந்தார். அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகி அரசியலில் இறங்கினார். நீண்ட வருடங்களுக்கு பிறகு தற்போது இயக்குனர் ராகேஷ் இயக்கத்தில் சாமனியன் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதை தொடர்ந்து மற்றொரு புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளாராம்.
இதுமட்டுமல்லாமல் தற்போது அறிமுக இயக்குனர் கார்த்திக் இயக்கத்தில் ராமராஜன் கதாநாயகனாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இதில் வழக்கறிஞர் வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு உத்தமன் என்று தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் கதாநாயகியாக நடிக்க நடிகை மீனா உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.