கமல் தொகுத்து வழங்க பிக்பாஸ் 7 துவங்கியது: 100 நாட்கள் தாக்குபிடிக்க போகும் போட்டியாளர் யார்? | விஜய்க்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி? | தணிக்கை சான்றிதழுக்கு அனுப்பப்பட்ட விஜய்யின் லியோ படம்! | இறைவன் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! | பகவந்த் கேசரி படத்தின் இரண்டாம் பாடல் அறிவிப்பு! | சூரி நடிக்கும் கருடன் பட அப்டேட்! | நாகார்ஜூனா படத்தில் இணைந்த இரண்டு இளம் நாயகிகள்! | பொங்கலுக்கு வெளியாகிறது ‛லால் சலாம்' | நியூயார்க்கில் சைக்கிள் ரைடு சென்ற திரிஷா! | விஜய் 68வது பட பாடலுக்கு நடனம் அமைக்கும் ராஜூசுந்தரம்! |
ஜெயிலர் படத்தை முடித்துவிட்ட நடிகர் ரஜினிகாந்த் தற்போது அவரது மூத்த மகள் இயக்குனர் ஜஸ்வர்யா இயக்கத்தில் ‛லால் சலாம்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து ‛ஜெய் பீம்' பட இயக்குனர் தா.சே.ஞானவேல் இயக்கத்தில் தனது 170வது படத்தில் ரஜினி நடிக்கவுள்ளார். போலி என்கவுன்டர் தொடர்புடைய கதைக்களத்தில் இந்தப்படம் உருவாக உள்ளது.
இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க விக்ரம் உடன் பேச்சுவார்த்தை நடந்தது. கணிசமான சம்பளம் தருவதாக கூறியும் அவர் நடிக்க சம்மதம் சொல்லவில்லை. இந்த நிலையில் இப்போது இந்த படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் அர்ஜுன் உடன் இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்கிறார்கள்.
சமீபகாலமாக நடிகர் அர்ஜுன் குணச்சித்ரம் மட்டுமல்லாது வில்லன் வேடங்களிலும் நடித்து வருகிறார். விஷாலின் இரும்புத்திரை படத்தில் வில்லனாக நடித்தார். தற்போது நடிகர் விஜய்யின் லியோ படத்தில் வில்லனாக நடிக்கிறார். அடுத்து ரஜினி படத்திலும் வில்லனாக நடிக்க போகிறார்.