தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் 5வது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கோப்பையை பெற்றுத் தந்துள்ளார் கேப்டன் டோனி. மனசுக்கு நெருக்கமானவர்களுக்கு தனது கையெழுத்திட்ட பேட்டை பரிசாக அனுப்பி வருகிறார் தோனி. அந்த வரிசையில், நடிகரும், தனது ரசிகருமான யோகிபாபுவுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். படப்பிடிப்பில் இருந்த யோகிபாபுவிடம் தோனியின் பிரதிநிதிகள் இதனை வழங்கினார்கள். அந்த பேட்டில் தோனி வாழ்த்து தெரிவித்து கையெழுத்திட்டிருந்தார். அதை ஆச்சர்யத்துடன் பார்த்த யோகி பாபு அதற்கு முத்தம் கொடுத்து தோனிக்கு நன்றி தெரிவித்தார். தோனியின் மனைவி சாக்ஷி கதை எழுதி தயாரிக்கும் எல்.ஜி.எம் என்ற படத்தில் யோகிபாபு நடித்து வருகிறார். இந்த படத்தில் ஹரீஷ் கல்யாணும், இவானாவும் நாயகன், நாயகியாக நடிக்கிறார்கள்.




