ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
கடந்த 2020ல் கொரோனா முதல் அலை ஆரம்பித்த சமயத்தில் இருந்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் வரை அதன் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட சாமானியர்கள் பலருக்கும் போக்குவரத்து, உணவு, கல்வி, மருத்துவம், விவசாயம் என வெவ்வேறு விதமான உதவிகளை வழங்கியவர் பாலிவுட் வில்லன் நடிகர் சோனு சூட். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் அவரை ரியல் ஹீரோவாகவே போற்றி புகழ ஆரம்பித்து விட்டனர். கொரோனா அலை ஓய்ந்த பின்னும் இப்போதும் கூட தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். இந்த நிலையில் பீகாரில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் படிப்பதற்காக மிகப்பெரிய அளவில் பள்ளி கட்டிடம் ஒன்றை கட்டித் தர முன்வந்துள்ளார் சோனு சூட்.
கடந்த பிப்ரவரி மாதம் பீகாரை சேர்ந்த 27 வயதான பைரேந்திர குமார் என்பவர் தான் பார்த்துவந்த முழுநேர பணியை உதறிவிட்டு வெளியே வந்து ஆதரவற்ற குழந்தைகளுக்காக ஒரு பள்ளியை துவங்கி அதற்கு நடிகர் சோனு சூட்டின் பெயரை சூட்டி நடத்தி வருகிறார். இந்த தகவலை கேள்விப்பட்டு ஆச்சரியப்பட்ட சோனு சூட் அவர் தற்காலிக கட்டடத்தில் நடத்தி வந்த அந்த பள்ளிக்கு வருகை தந்து அவரது சேவையை பாராட்டினார்.
பெற்றோர் இல்லாத ஆதரவற்ற கிட்டத்தட்ட 110 மாணவர்கள் தங்கி படிக்கும் விதமாக அவர் நடத்தி வரும் பள்ளிக்கு போதுமான கட்டட வசதி இல்லை என்பதை கவனித்த சோனு சூட் தற்போது இந்த பள்ளிக்கு மிகப்பெரிய கட்டிடம் கட்டித்தருவதற்காக அவருக்கு வாக்குறுதி அளித்துள்ளார். கல்வியை அதிக அளவில் ஏற்றுக்கொள்ள வைப்பது என்பது ஏழ்மைக்கு எதிராக போராடும் முக்கியமான வழிகளில் ஒன்றாகும் என இதுகுறித்து கூறியுள்ளார் நடிகர் சோனு சூட்.