வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் |
இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும், பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் மும்பை அணியின் முக்கிய வீரருமான சூர்யகுமார் யாதவ் இந்த வருட பிரீமியர் தொடரில் அதிரடியாக விளையாடியவர்களில் அவரும் ஒருவர். நேற்று முன்தினம் (மே 26) நடைபெற்ற குவாலிபையர்-2 போட்டியில் குஜராத் அணியுடன் மோதி அவர் சார்ந்த மும்பை அணி தோல்வியுற்று வெளியேறியது.
இதனிடையே, விமானப் பயணம் ஒன்றின் போது விஜய், ராஷ்மிகா மந்தனா நடித்த 'வாரிசு' படத்தை அவர் ரசித்துப் பார்க்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. படத்தில் இடம் பெற்ற போர்டு மீட்டிங் காட்சியைப் பார்த்தபடி வீடியோ எடுப்பவரை நோக்கி சிரித்தபடியே, கைகளை நடனமாடும் விதத்தில் சூர்யா அசைத்த வீடியோவை விஜய் ரசிகர்கள் அதிக அளவில் பகிர்ந்து வருகிறார்கள்.
விஜய் படத்தின் பாடல்கள் பிரீமியர் லீக் போட்டிகளின் போது அதிகமாக பகிரப்படுவது வழக்கம். 'மாஸ்டர்' படத்தின் 'வாத்தி கம்மிங்' பாடல் 2021ம் வருட பிரீமியர் லீக் போட்டியின் போதும், கடந்த வருடம் 'பீஸ்ட்' படத்தின் 'அரபிக் குத்து' பாடலும் அதிகமாகப் பகிரப்பட்டது. இப்போது 'வாரிசு' படத்தையும் பிரபலமாக்கி பகிர்ந்து வருகிறார்கள்.