ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் |
நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான பிச்சைக்காரன் என்கிற திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சசி இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் கோடீஸ்வரனாக இருக்கும் விஜய் ஆண்டனி சில காரணங்களால் ஒரு மாத காலத்திற்கு பிச்சைக்காரனாக வாழ வேண்டிய சூழல் ஏற்படும். உணர்வுபூர்வமாக உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகமாக பிச்சைக்காரன்-2 என்கிற படத்தை தானே இயக்கி நடித்து கடந்த வாரம் வெளியிட்டார் விஜய் ஆண்டனி.
முதல் பாக அளவுக்கு இல்லாவிட்டாலும் இந்த இரண்டாவது பாகத்திற்கு கலவையான விமர்சனமும் டீசன்டான வசூலும் கிடைத்து வருகின்றன. குறிப்பாக பிச்சைக்காரன் படம் ஆந்திராவில் ஏற்கனவே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்த நிலையில் இந்த பிச்சைக்காரன்-2 படமும் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பல இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து வரும் விஜய் ஆண்டனி ராஜமுந்திரிக்கும் சென்றுள்ளார். அப்போது அங்கே சாலையில் அமர்ந்திருந்த சில பிச்சைக்காரர்களை பார்த்து அவர்களை அங்கிருந்த ஒரு நல்ல ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று அமர வைத்து விருந்தளித்து மகிழ்வித்துள்ளார். அந்த சமயத்தில் அவரே தன் கைப்பட அவர்களுக்கு விருந்து பரிமாறி உபசரித்துள்ளார். விஜய் ஆண்டனியின் இந்த மனிதநேய செயல் சோசியல் மீடியாவில் ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.