7ஜி ரெயின்போ காலனி 2 அப்டேட் சொன்ன செல்வராகவன் | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் வெளியானது! | விருது மாற்றி கிடைத்ததில் கொஞ்சம் வருத்தம் தான் : மஞ்சும்மல் பாய்ஸ் இசையமைப்பாளர் | நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த மாதுரி தீக்ஷித் : கோபத்தில் வெளியேறிய ரசிகர்கள் | கேரள அரசு குழந்தை நட்சத்திர விருதுகள் மிஸ்ஸிங் : கிளம்பியது சர்ச்சை | ஆர்யன் பட கிளைமாக்ஸ் மாற்றம் : ஹீரோ விஷ்ணு விஷால் அறிவிப்பு | சாய் அபயங்கரை வாழ்த்திய அல்லு அர்ஜுன்! | வேகம் எடுக்கும் விஜய்யின் 'ஜனநாயகன்' படக்குழு! இம்மாதம் முதல் பாடல் வெளியாகிறது! | அஜித் 64வது படத்தில் நடிக்க விஜய்சேதுபதி, லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை! | டிரெயின் பட ரிலீசில் அதிரடி முடிவு எடுத்த தாணு |

சினிமாவை பொறுத்தவரை படங்கள் பிரமாண்டமாக எடுக்கப்பட்டாலும் பெரிய நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் அதன் புரமோஷன் நிகழ்ச்சிகள் தான் படத்தின் வெற்றியில் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன. பெரும்பாலான படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் படத்தின் கதாநாயகிகள் மற்றும் ஒரு சில படங்களில் கதாநாயகர்கள் தங்களது படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை என்கிற குற்றச்சாட்டு தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கதாநாயகனாக அறிமுகமாகி தற்போது பிஸியான வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகர் வினய் ராய் தான் நடிக்கும் சில படங்களில் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். ஒரு சில படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது இல்லை.. இது ஏன் என்பது குறித்து தற்போது அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
“புரமோஷன் என்பதும் படம் தொடர்பான ஒரு வேலை தான் என்றாலும் அதற்காக தனியாக நேரம் ஒதுக்கி மெனக்கெட வேண்டி இருக்கிறது. அதனால் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு என தனியாக ஊதியம் வழங்கினால் மட்டுமே அந்த படத்தில் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறேன். அப்படி தங்களது ஒப்பந்தத்தில் இதுகுறித்து குறிப்பிடாமல் புரமோஷனில் கலந்து கொள்ள சொன்னால் ஸ்ட்ரிக்ட்டாக மறுத்து விடுகிறேன்” என்று கூறியுள்ளார்.