'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
வாகை சூடவா, மெளன குரு படங்களின் மூலம் பிரபலமானவர் இனியா. தமிழ், மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சமீபகாலமாக இரண்டாவது நாயகி, சிறப்பு தோற்றங்களில் நடித்து வருகிறார். கடைசியாக 'ரைட்டர்' படத்தில் சமுத்திரகனி மனைவியாக நடித்திருந்தார். 'ஆதார்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் அவர் கதையின் நாயகியாக நடிக்கும் படம் 'சீரன்'. இதில் இனியாவுடன் அருந்ததி, சோனியா அகர்வால், ஆடுகளம் நரேன் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஜேம்ஸ் கார்த்திக் என்ற புதுமுகம் நாயகனாக நடிக்கிறார். துரை.கே.முருகன் இயக்குகிறார்.
படத்தை தயாரித்து, நாயகனாகவும் நடிக்கும் ஜேம்ஸ் கார்த்திக் கூறியதாவது : செய்யாறு பகுதியில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து படம் தயாராகி உள்ளது. என் பெற்றோர் கலப்பு திருமணம் செய்ததால் எதிர்ப்புகளை சந்தித்தனர். ஊர்மக்களின் புறக்கணிப்புக்கும் ஆளானார்கள். என் தாயார் கஷ்டப்பட்டு என்னை வளர்த்துப் படிக்க வைத்தார். இப்போது நான் நல்ல நிலையில் இருக்கிறேன். சிங்கப்பூரில் தொழில் செய்கிறேன். என் பெற்றோர் மற்றும் எனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து இந்தப் படம் தயாராகிறது. ஊர் மக்கள் வெறுப்பை மறந்து எங்களை ஏற்றுக்கொண்டார்களா? என்பது கதை. என்றார்.