கமல் தொகுத்து வழங்க பிக்பாஸ் 7 துவங்கியது: 100 நாட்கள் தாக்குபிடிக்க போகும் போட்டியாளர் யார்? | விஜய்க்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி? | தணிக்கை சான்றிதழுக்கு அனுப்பப்பட்ட விஜய்யின் லியோ படம்! | இறைவன் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! | பகவந்த் கேசரி படத்தின் இரண்டாம் பாடல் அறிவிப்பு! | சூரி நடிக்கும் கருடன் பட அப்டேட்! | நாகார்ஜூனா படத்தில் இணைந்த இரண்டு இளம் நாயகிகள்! | பொங்கலுக்கு வெளியாகிறது ‛லால் சலாம்' | நியூயார்க்கில் சைக்கிள் ரைடு சென்ற திரிஷா! | விஜய் 68வது பட பாடலுக்கு நடனம் அமைக்கும் ராஜூசுந்தரம்! |
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் 28ம் தேதி, ஐந்து மொழிகளில் தியேட்டர்களில் வெளியான படம் 'பொன்னியின் செல்வன் 2'.
இப்படம் பணம் செலுத்திப் பார்க்கும் முறையில் நேற்று ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. எச்டி தரத்தில் படத்தைப் பார்க்க ரூ.399 கட்டணம். படம் வெளியாகி ஒரு மாதத்திற்குள்ளாக ஓடிடி தளத்தில் படம் கட்டண முறையில் மட்டுமே பார்க்க வழி செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு வாரங்களில் அந்தக் கட்டணம் நீக்கப்பட்டு, பின் சந்தாதாரர்கள் மட்டும் கட்டணமில்லாமல் பார்க்க முடியும்.
'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகம் வெளியான போதும் இதே முறையில்தான் வெளியானது. முதல் பாகத்தைப் போல இரண்டாம் பாகத்தை நிறைய பேர் தியேட்டர்களில் சென்று பார்க்கவில்லை. அதனால் இரண்டாம் பாகத்தின் வசூல் 300 கோடிக்கும் சற்றே கூடுதலாக மட்டுமே வசூலித்துள்ளது. முதல் பாக வசூல் 500 கோடியைத் தாண்டியது குறிப்பிடத்தக்கது. எனவே, இரண்டாம் பாகத்தை ஓடிடி தளத்தில் பலரும் பார்க்க வாய்ப்புள்ளது.